**வி.களத்தூர்குரல் தங்களை அன்புடன் வரவேற்கிறது. இத்தளத்தைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்க **vkalathurkural@gmail.com ***

14.11.14

கடன்கார மந்திரி, காணாமல் போன மந்திரி, கிரிமினல் மந்திரி



அடடா. அடடா, யாருக்கய்யா கிடைக்கும் இந்த பெருமை! உலக அரசியல் வரலாற்றிலேயே
இப்படி பொறுக்கியெடுத்த முத்துக்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் பெருமை நம்ம மோடிஜியைத் தவிர வேறு யாருக்கு உண்டு,
வங்கிகளில் கடன் வாங்கி திருப்பித் தராத மோசடிப் பேர்வழிகளின் பட்டியலில் உள்ள திரு வொய்.எஸ்.சவுத்ரி என்பவரை தனது அமைச்சர்களின் பட்டியலில் இணைக்கும் தைரியம் மோடியைத் தவிர உலகில் வேறு யாருக்காவது உண்டா? 
வெறும் 316 கோடி ரூபாய்தான் ஜெண்டில்மேன், அவ்வளவு கம்மியான தொகையைத்தான் நம்ம கடன்கார திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். அவரிடம் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். வங்கியில் போட்டால் திருடர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்றுதானே விளக்கம் சொல்லப் போகிறீர்கள்.
காணாமல் போன மந்திரிக்கு இன்னொரு பெயரும் உண்டு. கற்பழிப்பு மந்திரி. ஆமாம் ராஜஸ்தான் மாநிலம் தந்த பொக்கிஷம் நிகால்சந்த் மேஹ்வால். இவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும். அவரைப் பிடித்துத் தரச் சொல்லி போலீசுக்கு சம்மன் அனுப்பும். தார் பாலைவனம் வரை தேடி விட்டு அவரைக் காணோம் என்று ராஜஸ்தான் போலீஸ் கோர்ட்டுக்கும் சொல்லி விடும். அவரு எப்படி கிடைப்பாரு? அவர்தான் மோடி அண்ணன் பக்கத்துலயே பத்திரமா இருக்காரே.
அடுத்தவர் .ராம்பால் கேதாரியா. இவர் மீது இருபத்தி ஒன்று கிரிமினல் வழக்குகள்தான் இருக்கு. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என எல்லாமே உண்டு. இப்படி ஒரு வீர தீர சூரனை மந்திரியாக்காவிட்டால் எப்படினு இப்பத்தான் அமைச்சர் பதவி கொடுத்து அவரது வீரத்துக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார் மோடிஜி. திறமைகளை வேற எப்படிய்யா கௌரவிக்க முடியும்.
உங்களையும் என்னையும் பாகிஸ்தானுக்கு போகச் சொன்ன கிரிராஜ்சிங் அண்ணனுக்கும் இப்பத்தான் மந்திரி யோகம் கிடைச்சது. ஏற்கனவே பழம் தின்னு கொட்டை போட்ட மந்திரிங்க வி.கே.சிங், உமா பாரதி, நிதின் கட்காரி என்ற பெரிய பட்டியல் இருக்கு.
இருக்கிற மந்திரிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் என்ற சிறப்பு மோடிஜிக்கு மட்டுமே உண்டு. சகாக்கள் கிரிமினல் என்றால் மோடி? அவர்தாங்க பாஸ்.
Read More...

8.11.14

சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதமானது-உச்ச நீதிமன்றம் !


சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது.

Read More...

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசு எதிர்ப்பு!



ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத   பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, பேரணி அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் 7 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று(7ஆம் தேதி) மதியம் வந்தது. அப்போது, சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 காவல் நிலைய ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ”ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் பேரணியில் பாதுகாப்புப் படையினரைப் போன்று சீருடை அணிந்து செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், பிற மத வழிபாட்டுத் தலங்கள் வழியாகச் செல்லவும் திட்டமிட்டுள்ளதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரியது. ஆனால் அக்கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
Read More...

சுத்தமான இடத்தில் குப்பையை கொட்டி சுத்தம் செய்வது போல போஸ் கொடுத்த தில்லி பாஜக தலைவர்!!



இந்தியத் தலைநகர் டில்லியின் புறநகர்ப்பகுதியில் உள்ள சுத்தமான இடமொன்றில், குப்பைகளை சுத்தம் செய்வது போல நடிக்கும் அரசியல்வாதி ஒருவரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்துவருகின்றன.
காய்ந்த இலைகுலைகளை வீல்-பரோ (பொருட்களை சுமக்கும் வண்டி) ஒன்றில் பணியாளர் ஒருவர் தள்ளிச் செல்வதையும், கலாசார நிலையம் ஒன்றின் முன்னால் சுத்தமாக இருந்த இடமொன்றில் அவற்றைக் கொண்டுவதையும் படங்கள் காட்டுகின்றன.
இந்தியாவின் ஆளும் பாஜகவின் டில்லி தலைவர் சதிஷ் உபாத்யாய், கமராக்களுக்கு முன்னால் அந்தக் குப்பைகளை பின்னர் கூட்டி சுத்தம் செய்துள்ளார்.
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி, பெரும் பிரசார முன்னெடுப்புடன் ‘க்ளீன் இந்தியா’ (சுத்தமான இந்தியா) திட்டத்தை கடந்த மாதம் ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிரபலங்கள் பலரும் வீதிகளை கூட்டி சுத்தப்படுத்தும் படங்களை வெளியிட்டிருந்தனர்.
Read More...

4.11.14

சைவம்-அசைவம்: கல்வி நிறுவன உணவகங்களில் நுழையும் கலாச்சார சித்தாந்தம்!



இந்தியாவில் உள்ள இந்திய தொழில் நுட்ப கல்லூரி (IIT) மற்றும் இந்திய மேலாண்மை கல்லூரி (IIM) நிறுவனங்களில் சைவ உணவு உண்பவர்களுக்கு தனி உணவருந்தும் இடத்தை அமைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் எஸ்.கே ஜெயின் அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு அனைத்து ஐஐடி, ஐஐஎம் கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மத்திய பிரதேச ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஜெயின் எழுதியுள்ள அந்த கடித்தத்தில்; அசைவ உணவு மேற்கத்திய உணவாகும், அது இந்திய பாரம்பரியத்திற்கு உரியது அல்ல. 
அசைவ உணவு உண்ணும் மாணவர்களுடன் சைவ உணவு உண்ணும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் போது நாளடைவில் அவர்கள் எளிதில் இந்திய கலாச்சாரத்தை விட்டு மாறி அவர்களும் அசைவ உணவு உண்பவர்களாக மாறிவிடுகின்றனர். 
இதனால் அவர்களின் பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அகவே அரசு இந்த நடவடிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.’ என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்; இதுபோன்று 20க்கும் மேற்ப்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளதால் ஜெயினின் கடித்தத்தை பரிசீலிக்கும் படியும், அதுதொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் அறிக்கை அளிக்குமாறு பணித்துள்ளது.
இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு ஜெயின் அளித்த பேட்டி ஒன்றில்; அசைவ உணவுகள் இந்திய கலாச்சாரத்துக்கு மாற்றமானது, குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அசைவ உணவுகளே காரணமாகின்றன எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்; ‘இந்தியாவின் அநேக குடும்பங்களில் அப்பா சிந்தியாகவும், அம்மா பஞ்சாபியாகவும் கலந்த கலவையாக உள்ளனர். அவர்களின் குழந்தைகள் முஸ்லிமை திருமணம் செய்து கொள்பவராக உள்ளனர். 
இதற்கு காரணம் அவர்களின் மூளையை மலுங்கச் செய்த அசைவ உணவே ஆகும். இவ்வாறு ஏற்படும் கலாச்சார, பண்பாடு சீரழிவின் காரணமாகவே நான் இந்த கோரிக்கை கடிதத்தை எழுதினேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவனான எனது கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்’ எனவும் கூறியுள்ளார்.

முன்னர் இதுபோன்று; ‘ஐஐடி நிறுவனங்கள் அனைத்திலும் அசுத்தமான மாமிசங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் காய்கறி உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். 
இதன் மூலம் மேற்கத்திய கலாச்சார ஊடுருவலை தடுக்க முடியும்.’ என ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்தது. ஆனால் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கல்வி நிலையங்கள் அனைவருக்கும் பொதுவானவை. ஆகவே அங்கு மத ரீதியான, கலாச்சார ரீதியான பாகுபாட்டை கொண்டுவர இயலாது எனக்கூறி அந்த கோரிக்கையை நிராகரித்தது.
இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு இடங்களில், அரசுத் துறைகளில் இந்து மத கலாச்சாரம் எனக்கூறி ஹிந்துத்துவா சித்தாந்தங்களை திணிக்கும் சூழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஜெயின் கடிதத்தை அனைத்து ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்தியாவில் வாழும் மக்களில் 80 சதவீதம் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கின்றனர் என்கிறது இந்திய மானுடவியல் ஆய்வின் அறிக்கை.
மேலும் இந்திய மக்களின் இறைச்சி நுகர்வு அளவு 1கிலோவிலிருந்து 2004 ஆம் ஆண்டில் 2.5 கிலோவாக அதிகரித்துள்ளது எனவும், இது 2023 ஆம் ஆண்டில் 4.6 கிலோவாக அதிகரிக்கும். எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆக இந்தியாவின் பெரும்பாலான மக்களின் உணவு பழக்கம் அசைவமாக இருக்கும் நிலையில், அசைவம் இந்திய கலாச்சாரம் இல்லை எனவும், 20 சதவீதம் பேர் மட்டுமே கொண்ட சைவ உணவு பழக்கத்தை இந்திய கலாச்சாரம் என அரசுத்துறைகள் மூலமாக பதிய வைக்கும் முயற்சிகள் யாருக்கானது? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
அசைவ உணவு இந்திய கலாச்சாரம் இல்லை என கூறும் ஹிந்துத்துவா அமைப்புகள், புராணங்களிலும் இதிகாசங்களிலும் அசைவ உணவை இருந்ததையும், அவதார புருஷர்கள் அசைவ உணவு உண்ட நிகழ்வையும் மறந்துவிட்டார்கள். 
இராமயணத்தில் (அயோத்யா காண்டம், சர்க்கம் 96 சுலோகம் 1) சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த மாமிச உணவைக் கொடுத்து ராமன் கூறினான், ‘இது ஊட்டம்மிக்க உணவு, ருசியான, திருப்பத்தைத் தரக்கூடியது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேத காலத்திய பிராமணர்கள் புலால் உண்டிருக்கிறார்கள். அதேபோல், இன்றைக்கும் வடஇந்திய பிராமணப் பிரிவுகள் சிலவற்றில் மீன் மற்றும் ஆட்டிறைச்சி உண்பது பழக்கத்தில் உள்ளது. 
அதையெல்லாம் மூடிமறைத்து, சைவ உணவுப் பழக்கத்துக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் திருப்பும் முயற்சியாக கல்வி நிறுவனங்களில் கலாச்சாரம் என சித்தாந்தத்தை திணிப்பது வீண் செயலாகும்.
உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களைத் தனிமைப்படுத்துவது விரும்பத் தக்க செயல் அல்ல. உணவுப் பழக்கம் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அதனை கல்வி நிறுவனம் உள்ளிட்ட பொது நிறுவனங்களில் மனித உறவுகளைப் பிரித்துக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் ஏற்கத் தக்கதல்ல.
மதமும், உணவும் தனி மனித உரிமைகளாகும். மதம் அரசியலாகவோ பொது கொள்கையாகவோ ஆகும் போது மனித உரிமை மீறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபோல் தான் உணவும். ஆகவே தனிமனித சுதந்திரத்தில் இத்தகைய தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.
Read More...

தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு மோடி அரசு தான் காரணம்: வைகோ தாக்கு!



ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பால் விலை உயர்வு சாமனிய மக்களை மிகவும் பாதிக்கும் எனவும், இலங்கை நீதிமன்றத்தினால் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
 பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு  தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு மோடி அரசு தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
Read More...

மீரட் லவ் ஜிகாத் சதி – ஆர்.எஸ்.எஸ்-இன் அண்டப்புளுகு !



ஆமாம் நான் அவனைத் திருமணம் செய்து கொள்வேன். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. அவனுக்கு நான் கல்யாணத்திற்குப் பின் இந்துவாக தொடர்வதிலோ கோவிலுக்குப் போவதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

டந்த ஆகஸ்ட் 3-ம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் நகருக்குட்பட்ட சாராவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்,  காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகார் ஒன்று மாபெரும் சூறாவளியை துவக்கியது. இதை அந்தப் பெண்ணே எதிர்பார்த்திருக்க மாட்டார். 
இருபது வயதே நிரம்பிய இளங்கலை மாணவியான அவர், தற்காலிக பணியாக தனது கிராமத்திலிருந்த மதரசாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
லவ் ஜிகாத்ஜூலை 23-ம் தேதி திடீரென்று தனது வீட்டை விட்டு வெளியேறி மாயமான அந்தப் பெண் நான்கு நாட்கள் கழித்து வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அடையாளத்துடன் வீடு திரும்பினார். இது  குறித்து வீட்டார் விசாரித்த போது, தான் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா சென்றதாகவும், சென்ற இடத்தில் வயிற்று வலி ஏற்பட்டு அப்பெண்டிசைடிஸ் (குடல்வால்) பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜூலை 29-ம் தேதி அந்தப் பெண் ‘மாயமான’தாகச் சொல்லும் அவளது குடும்பத்தார், ஆகஸ்ட் 3-ம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார்கள். அதில் அந்த பெண்ணே, தான் சாராவா கிராம மதரஸாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததாகவும்,
 முசுலீம்கள் சிலர் தன்னைக் கடத்தி கூட்டு வல்லுறவு செய்ததாகவும், கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்டு வல்லுறவால் தான் கருவுற்றதாகவும், அந்தக் கருவைக் கலைப்பதற்கே அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது வடநாட்டு ஊடகங்களால் “மீரட் பெண்” என்று குறிப்பிடப்படும் அந்தப் பெண் காவல் துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து சொல்லி வைத்தாற் போல் இந்து இயக்கங்கள் ‘கொந்தளித்து’ எழுந்தன. இசுலாமியர்கள் இந்துப் பெண்களின் மேல் தொடுத்துள்ள ’லவ் ஜிஹாத்’ போரின் ஒரு அங்கமாக இந்த சம்பவத்தை சித்தரித்த காவி கும்பல், உடனடியாக இந்த விவகாரத்தை முன்வைத்து மாநில அளவில் பல போராட்டங்களைத் துவக்கியது.
நடந்து முடிந்த உத்திரபிரதேச இடைத்தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பாரதிய ஜனதாவின் மாநில பொறுப்பாளர் யோகி ஆதித்யநாத், “இசுலாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு இந்துப் பெண்ணுக்கும் பதிலாக நூறு இசுலாமிய பெண்களைத் தூக்கி வந்து இந்துக்களாக மதம் மாற்ற வேண்டும்” என்று மதவெறியைக் கக்கியுள்ளார்.
இதற்காகவே காத்திருந்ததைப் போல் ஆர்.எஸ்.எஸ் சார்பில் “இந்து சகோதரிகள், மகள்கள் பாதுகாப்பு இயக்கம்” (Hindu Behen Betti bachao Andholan) “மீரட் பாதுகாப்பு இயக்கம்” (Meerut Bachao Manch) போன்ற புதிய பரிவார திடீர் அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. இந்த அமைப்புகளின் சார்பில் இந்து பெண்களை முசுலீம் காம கொடூரர்களிடம் இருந்து காப்பாற்றக் கோரி துண்டுப் பிரசுரங்கள் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பாஜக மகிளா மோர்ச்சா
‘லவ் ஜிகாத்’ – பாஜக மகிளா மோர்ச்சா ஆர்ப்பாட்டம்
சர்வதேசிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் இந்துப் பெண்களை முசுலீம் இளைஞர்களைக் கொண்டு மயக்கி காதலித்து இசுலாத்திற்கு மதம் மாற்றுவதாக இந்துத்துவ கும்பல் வட இந்தியா முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 
இந்து பார்ப்பன பெண்ணை காதலித்து மயக்க இரண்டு லட்ச ரூபாய்களும், இந்து ரஜபுத்திர அல்லது சத்ரிய பெண்களை காதலித்து மயக்க ஒரு லட்ச ருபாய்களும் இசுலாமிய இளைஞர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் சம்பளமாக கொடுப்பதாக காவிக் கும்பல் குற்றம்சாட்டியது. அதிலும் தலித்துக்களுக்கு இடமில்லை போலும். தலித்துக்கள் இந்துக்கள் இல்லை என்று இந்துமதவெறியர்கள் நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
வட இந்திய ஊடகங்கள் தங்கள் பங்குக்கு ’மீரட் கூட்டு வல்லுறவு” தாக்குதல் பற்றிய தங்களது புலனாய்வு முடிவுகளை வெளியிடத்துவங்கின. மீரட் பெண்ணின் சிறுநீரகத்தை மதரஸாவில் வைத்து அறுத்து எடுத்து விற்று விட்டனர் 
என்பதில் துவங்கி, எத்தனை முசுலீம்கள் எத்தனை முறை எத்தனை நாட்கள் வல்லுறவு செய்தனர் என்பது வரை விதவிதமான கட்டுரைகளை எழுதி திரைக்கதையில் பல்வேறு “திகிலூட்டும்” திருப்பங்களைச் சேர்த்து வந்தனர்.
காவி கும்பல் போட்ட பிரச்சாரக் கூச்சல் ஒரு பக்கமும் ஊடகங்களின் ‘புலனாய்வுகள்’ இன்னொரு பக்கமும் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும் போதே இவ்விவகாரத்தின் உண்மை 
மெல்ல மெல்ல வெளியாகத் துவங்கியது. மீரட் பெண்ணின் சார்பாக அவளது குடும்பத்தார் அளித்த புகாரில் ஜூலை மாதம் 23-ம் தேதி தங்கள் பெண் இசுலாமியர்களால் கடத்தப்பட்டதாகவும் அதே நாளில் வல்லுறவுக்கு 
உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் புகாரைப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில் அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு நடந்த போது அவள் ஒன்றரை மாத கர்ப்பவதியாக இருந்தது தெரியவந்தது. உடனே புகாரை மாற்றிக் கொண்ட பெண்ணின் குடும்பத்தார், அவள் ஜூன் 29-ம் தேதி வல்லுறவு செய்யப்பட்டாள் என்பதாக திருத்திக் கொண்டனர்.
மௌல்வி அமீருதீன்
சாரவா கிராமத்தின் மதரசா சுல்தானியாவில் – மௌல்வி அமீருதீன்
மேலும் முதலில் அளித்த புகாரில் வல்லுறவு செய்த கும்பலைச் சேர்ந்தவர்களாக சாராவா கிராமத் தலைவர் (சர்பன்ச்) நவாப், மற்றும் உள்ளூர் மதபோதகர் சனாவுல்லா ( விவசாயியான இவருக்கும் மதபோதனைக்கும் சம்பந்தமேயில்லை என்பது காவல்துறையின் விசாரணையில் பின்னர் தெரியவந்தது) மற்றும் இவர்களோடு பெயர் தெரியாத நான்கு பேர்களையும் தங்கள் புகாரில் அப்பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர். 
இதனடிப்படையில் நவாப் மற்றும் சனாவுல்லா ஆகிய இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஒன்பது பேரும் படிப்படியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மீரட் பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்தபடி முசாஃபர் நகர மருத்துவமனையில் கருக்கலைப்பு நடைபெறவில்லை என்பதையும் மீரட் நகர அரசு மருத்துவமனையில் நடந்துள்ளதையும் போலீசு விசாரணை உறுதிப்படுத்தியது. மேலும், மீரட் பெண்ணின் 
குடுமபத்தார் அளித்த புகாரில் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு இளைஞர்கள் (ஒரு முசுலீம் மற்றும் ஒரு இந்து) துணையோடு அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்ததையும், அவளுடன் சென்ற கலீம் என்கிற முசுலீம் இளைஞன் அப்பெண்ணின் கணவனாக மருத்துவமனைப் பதிவேடுகளில் பதிவு செய்திருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க அதன் விளைவாக ’மீரட் பெண்ணின்’ குடும்பத்தார் அளித்த புகாரில் இருந்த முரண்பாடுகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருந்தது. 
இன்னொரு பக்கம் விசாரணைகளின் முடிவுகள் பற்றி அலட்டிக் கொள்ளாத இந்துத்துவ குண்டர்படை, முசுலீம்கள் இந்துப் பெண்களைக் கடத்திச் செல்வதற்கு முலாயமின் போலீசு உதவி செய்வதாக இடைத்தேர்தலை முன்வைத்து மதவெறிப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த சூழலில் முதல் தகவலறிக்கையை பதிவு செய்யும் போலீசு அதில் கலீமின் பெயரையும் இணைத்து அவரையும் கைது செய்தது.
மாநில இடைத்தேர்தல் காலத்தில் காவி கும்பல் செயற்கையாக ”லவ் ஜிஹாத்” விவகாரத்தை கொளுத்திப் போட்டு குளிர் காயத் துவங்கியிருந்தனர். 
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக இந்துப் பெண்களுக்கு ராக்கி கட்டி ‘இசுலாமிய ஆணழகர்களிடம் மயங்கிவிடாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளும் 
கேலிக்கூத்தான இயக்கம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. சூழலின் இறுக்கம் மீரட் பெண்ணின் உயிருக்கு ஆபத்து எதையும் விளைவித்து விடக்கூடாது என்பதால் அவரது வீடு கடுமையான போலீசு கண்காணிப்பிற்கும் காவலுக்கும் உட்படுத்தப்படுகிறது.
இந்த சூழலில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் காவி கும்பல் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான முடிவுகள் வெளியாகி – மொத்தமாக கவிழ்த்துப் போட்டது. அக்டோபர் மாத துவக்கத்தில் மீரட் பெண்ணின் குடும்பத்தார் தங்களுக்கு போலீசு காவல் தேவையில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் காவல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
லவ் ஜிகாத் பாதிக்கப்பட்டவர்
காவி கும்பலின் பொய் பிரச்சாரத்தால் கைது செய்யப்பட்ட சாரவா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளில் ஒருவரின் தந்தை
இந்தச் சூழலில் அக்டோபர் 12-ம் தேதி தனது வீட்டிலிருந்து தப்பும் மீரட் பெண் மாஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் ஒன்றை அளிக்கிறார். முன்பு கொடுத்த புகாரின் படி யாரும் தன்னை வல்லுறவு செய்யவில்லை என்றும், தன்னை யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்றும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார் மீரட் பெண். மேலும், தான் கலீம் என்கிற முசுலீம் இளைஞரை காதலித்ததாகவும், அவர் மூலமாகவே கருவுற்றதாகவும், தாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த சூழலில் கர்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டதாலேயே அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஜூலை மாத இறுதியில் இருந்து தனது குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்ததாகவும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அகர்வால் என்பவர் தனது குடும்பத்திற்கு சுமார் 25,000 ரூபாய் கொடுத்ததன் பேரிலேயே அவர்கள் தனது காதலை எதிர்த்ததோடு தன் பெயரில் பொய் புகாரை அளித்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். 
தனது குடும்பத்தின் பிடியில் இருந்த சமயத்தில் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்ததால் தன்னை கவுரவக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாகவும் அதற்காகவே போலீசு காவலை நீக்கிக் கொள்ள கோரியதாகவும், தனது பாதுகாப்பின் பொருட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீரட் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட மாஜிஸ்டிரேட், அந்தப் பெண்ணின் கோரிக்கையின் பேரில் அரசு பெண்கள் காப்பகம் ஒன்றில் தற்போது தங்கவைத்துள்ளது.
காவி கும்பலின் திரைக்கதை ஒட்டு மொத்தமாக நொறுங்கி விழுந்துள்ள நிலையில் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக தற்போது தாம் பணம் கொடுத்ததை மறுக்க முடியாத நிலையில் அக்குடும்பத்திற்கு ”நல்லெண்ணத்தின் பேரில், ஒரு உதவியாகவே” அந்தப் பணத்தைக் கொடுத்ததாக அசடு வழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே அல்ஜசீரா நிருபர் நேகா தீக்சித் அப்பெண்ணைச் சந்தித்துள்ளார்.
மீரட் லவ் ஜிகாத்”பாருங்க என்னோட வாழ்க்கை முடிந்து விட்டது. இனி நான் எங்கே வாழ்ந்தாலும் இந்த மொத்த சம்பவங்களும் என்னைத் துரத்தும். அவர்கள் எனது உடலும் கருப்பையும் அசுத்தமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நான் கலீமோடு பேச வேண்டும், அவனுக்கு என்ன விருப்பமென்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்க யாரோடயாவது காதலில் இருந்தால் உங்களுக்கும் பாதி பொறுப்பு இருக்கு தானே? நாங்கள் தப்பு செய்திருந்தால் நாங்கள் இரண்டு பேருமே தண்டிக்கப் பட வேண்டும். 
ஒன்றுமில்லாத விசயத்திற்காக அவன் மட்டும் வாழ்க்கை முழுவதும் துன்பப் பட நான் ஏன் அனுமதிக்க வேண்டும்?” என்று தெரிவித்த மீரட் பெண், ”நான் வீட்டை விட்டு வெளியேறி போலீசிடம் போகாதிருந்தால் அவர்கள் என்னைக் கொன்றிருப்பார்கள்” என்று வீட்டாரின் கவுரவக் கொலைத் திட்டத்தை அம்பலப்படுத்துகிறாள்.
மேலும் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் தனது முடிவிலும் அவள் உறுதியாகவே இருக்கிறாள் “ஆமாம் நான் அவனைத் திருமணம் செய்து கொள்வேன். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. அவனுக்கு நான் கல்யாணத்திற்குப் பின் இந்துவாக தொடர்வதிலோ
 கோவிலுக்குப் போவதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. யாருடைய மதம் தப்பு? யாருடையதும் இல்லை. நாம் தான் மக்களை இந்துக்கள் என்றும் முசுலீம்கள் என்றும் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் நாம் எல்லோருமே ஒன்று தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த இருபது வயது பெண்ணின் எளிமையான வார்த்தைகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளின் முகத்தில் காறி உமிழ்வதாய் அமைந்தது தற்செயலானதல்ல. 
எளிய உழைக்கும் மக்கள் சில சமயங்களில் இந்துத்துவ பிரச்சாரங்களில் மயங்கினாலும், இறுதியில் அவர்களின் மனித தன்மையே வெல்கிறது. அவர்கள் தம்மியல்பில் இந்து மதவெறி பயங்கரவாத கும்பலின் நோக்கங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள்.
ஆனால், படித்த அதிகாரவர்க்கம்?
மூத்த காவல்துறை அதிகாரிகளின் இந்துத்துவ சாய்வு
மூத்த காவல்துறை அதிகாரிகளின் இந்துத்துவ சாய்வு (படம் : நன்றி thehindu.com)
யாகூ இணையதளத்தின் விவாதக் குழுமம் ஒன்றான டாப்காப் (TopCop) என்பது பணியில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் இணைய விவாதக் குழு. மீரட் பெண் விவகாரத்தை தொடர்ந்து ”லவ் ஜிஹாத்” குறித்து நடந்த விவாதங்களில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ்-ன் குரலில் இந்து பயங்கரவாத வன்மத்தைக் கக்கி இருக்கிறார்கள்.
“ஒரு போக்கு என்கிற வகையில் லவ் ஜிஹாத் என்பது உண்மை தான். அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் குற்றம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் 2003-ம் ஆண்டுத் வகுப்பைச் சேர்ந்த அதிகாரி . வேறு ஒரு அதிகாரி லவ் ஜிஹாத் என்பதைக் கடந்து “செக்ஸ் ஜிஹாத்” என்பதைக் குறித்து பேசியிருக்கிறார். 
தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இசுலாமிய இளைஞர்கள் தீய உள்நோக்கத்தோடு இசுலாமல்லாதவர்களை காதலித்து மதம் மாற்ற யோசிக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் அப்படி செய்தால் சொர்க்கத்தில் இடம் உண்டு என்பதை நம்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகார வர்க்க அடுக்கின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ அடிப்படைகளின் மீதே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு எதார்த்தம். அப்படியிருக்க, நச்சுப் பாம்பின் பல்லில் இருந்து பால் வடிவதற்கு வாய்ப்பில்லை.
 அதிகார வர்க்கம் தம் இயல்பிலேயே இந்துத்துவ பாசிசத்தின் நெருக்கமான பங்காளி என்பதை “சுதந்திர” இந்தியாவின் வரலாற்றில் பதிவாகியிருக்கும் எண்ணற்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தவே செய்கின்றன.
பார்ப்பனியச் சாதி அடுக்கை உத்திரவாதப்படுத்தும் மனுநீதி தான் இந்து-இந்தியாவின் இணைப்புக் கயிறு. இந்த விஷ விருட்சத்திலிருந்து நல்ல கனிகளை எதிர்பார்ப்பதே பேதமை. இயல்பாகவே சாதி மேலாதிக்க சிந்தனையும், இந்து பார்ப்பனிய மதவாத சிந்தனையும் 
கொண்டவர்களால் நிரம்பி வழியும் அதிகார பீடங்களுக்கு வந்து சேரும் சூத்திர பஞ்சமர்களும் கூட அங்கே நிலவும் பொது நீதிக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். 
விதிவிலக்குகள் ஓரிரண்டு இருக்கலாம், எனினும் விதிகள் வேறு! எனவே தான் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட திவ்யா இளவரசன் தம்பதியினர் சட்ட விரோதமாகவும் அறமற்ற முறையிலும் சாதி வெறியர்கள், 
கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்டு திவ்யா அவளது பெற்றோருடன் செல்லும் படி நிர்பந்திக்கப்படுகிறாள் – அவ்வாறு செய்யப்படுவது தான் எதார்த்தமானதென்று இந்துப் பொதுப்புத்திக்குச் சென்று சேர்கிறது.
ஒரு குற்ற விசாரணை அமைப்பில் பணிபுரிகிறோம், எனவே பாரபட்சமற்ற முறையில் சம்பவங்களை அணுக வேண்டும் என்கிற தொழில் முறை கடப்பாட்டுக்கு உட்பட்ட அதிகார வர்க்கம் எந்த கூச்ச நாச்சமும் இன்றி பட்டவர்த்தனமாக இணைய விவாதங்களில் வன்மத்தைக் கக்குகிறது 
என்றால் காக்கி பேண்டுகளுக்கு உள்ளே இரகசியமாக ஒளிந்திருக்கும் காக்கி டவுசர்களின் உண்மையான எண்ணிக்கை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான இரகசிய காவிக் கோவணங்கள் தகுந்த சமயத்தில் வெளிப்படக் காத்துக் கிடக்கின்றன. 
அது திவ்யா இளவரசன் தம்பதியினரைப் போல் பார்ப்பன விதிமுறைகளுக்கு அடங்க மறுப்பவர்கள் ஆபத்துக் காலத்தில் காவல் நிலையத்தை நம்பிக்கையோடு நாடிச் செல்லும் சமயமாக கூட இருக்கலாம்.
பாஜக பெருந்தலைகள்
பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் காவி பெருந்தலைகள் – ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக
அதிகார வர்க்கத்தின் கூட்டு தமக்குச் சாதகமாக இருக்கும் திமிரில் தற்போது அம்பலப்பட்ட நிலையிலும் “லவ் ஜிஹாத்” என்கிற கற்பனையான குற்றச்சாட்டோடு வட இந்தியாவின் இந்தி பெல்ட் எங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் காவிப் பொறுக்கிகள். வட மாநில இடைத்தேர்தலில் இந்தப் பிரச்சாரம் எடுபடாத காரணத்தால் தங்கள் முயற்சிகளை அவர்கள் கைவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை; ஏனெனில், சமூகம் மத அடிப்படையில் பிளவுபட்டுப் போவதிலேயே அவர்களது பாசிச அரசியலின் இருப்பும் எதிர்காலமும் தொக்கி நிற்பதால் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயல் வெறுமனே மத அடிப்படையிலான பயங்கரவாதம் மட்டுமில்லை. அது பெண்களின் அடிப்படை ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி.
’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது?  ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பாபரி மசூதிக்கு மட்டுமல்ல, ஏமாந்தால் கருவறைக்கும் 
சொந்தம் கொண்டாடத் தயங்காதவர்கள் என்பதோடு தமது கோரிக்கையை நிலைநாட்ட எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயங்காத கொலை பாதகர்கள் என்பதை ‘இந்து’ப் பெண்கள் உணர வேண்டும். இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பு என்பது எத்தகைய சதிகளோடும், மோசடிகளோடும் 
அரங்கேற்றப்படுகிறது என்பதை பொதுவான வாசகர்கள் சிந்திக்க வேண்டும். இந்த பொதுப்புத்திதான் ஆழ்மனதில் முசுலீம் மக்களை கட்டோடு வெறுப்பதை சாத்தியமாக்குகிறது.
இந்துக்களின் பாரம்பரியத்தை காப்பவர்கள் இந்து ஸ்த்ரீகளே என்று தேனொழுக பேசும் அதே ஆர்.எஸ்.எஸ் காவி பொறுக்கிகள் தான் பாரத மாதாவுக்கு சூடம் கொளுத்தி பூஜை செய்த கையோடு அமெரிக்காவுக்கு கூட்டிக் கொடுத்த மாமாப் பயல்கள் என்கிற உண்மையை தம்மை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர் புரிந்து கொண்டு சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.
நன்றி-வினவு
Read More...

30.10.14

பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!



த்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் ஆக மாற்றுதல், பல்கலைக்கழகங்களில் இந்தித் திணிப்பு… என்று மோடி அரசின் இந்துத்துவ வெறி நடவடிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமலாகிக் கொண்டிருக்கும் சூழலில், உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் என்ற பாரதிய ஜனதாக் கட்சி எம்.பி, தமிழின் மேன்மை பற்றி பொளந்து கட்டி வருகிறார்.
“வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக்கி, தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்!” இவையெல்லாம் சென்ற ஆண்டு (மன்மோகன் ஆட்சியில்) மாநிலங்களவையில் தருண் விஜய் பேசியவை.
உடனே அவரைப் பாராட்டி ஆனந்த விகடனில் (2, அக். 2013) ஒரு பேட்டி வெளியானது. “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்- என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ… தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!” என்று அதில் உருக்கமாகப் பேசுகிறார் தருண் விஜய்.
ஆனால், மேற்படி யோக்கியர் தற்போதைய மோடி அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. இருந்தபோதிலும், “தமிழுக்குக் கொடி பிடித்த பஞ்சாபி” என்ற தலைப்பில் ஜு.வி.-யில் மறுபடியும் ஒரு பேட்டி; “நானும் தமிழைக் காதலிக்கிறேன்” என்று தமிழ் இந்து நாளேட்டில் இன்னொரு பேட்டி.
“திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடவேண்டும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி வட இந்திய மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது” என்று இந்தப் பேட்டிகளில் சரம் சரமாக அடித்து விடுகிறார் தருண் விஜய். “இதையெல்லாம் மோடியிடமும் ராஜ்நாத் சிங்கிடமும் சொன்னீர்களா?” என்று யாரும் கேட்கவில்லை.
இப்பேட்டிகள் வெளியானதைத் தொடர்ந்து தருண் விஜய்க்கு கருணாநிதி, வைகோ, ராமதாசு போன்றோரின் பாராட்டுகள்! மறுபடியும் ஊடக விளம்பரம். மேற்படி தமிழர் தலைவர்களும் இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் தமிழகத்தின் தனிச்சிறப்பு! இன அழிப்பை நடத்தி வரும் ராஜபக்சே, அதிகாரப் பரவல், முன்னேற்றம் பற்றி அளந்து விடுவதைப் போன்றதுதான் தருண் விஜய்யின் பேச்சு.
இந்தி படிக்கும் அரசு ஊழியர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை தருகிறது மோடி அரசு. தமிழ் படிக்கும் வட இந்திய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தரவேண்டும் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்குத் தைரியமாகப் பேட்டி கொடுக்கிறார் அவருடைய கட்சி எம்.பி. தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை !
tarun-vijay-1உண்மை நிலை என்ன? வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த்துறைகளே இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளன. ஆக்ரா, மீரட், கான்பூர், அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இத்துறைகள் மூடப்பட்டுவிட்டன. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1945-ல் தொடங்கப்பட்ட தமிழ்த் துறையில், இரு பேராசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்குக் காரணம் தமிழ்மொழியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அருண் பாரதி. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நிதி அளித்த போதிலும், காசியின் சம்பூர்ணானந்தா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் காசி வித்யா பீடத்தில் தமிழுக்காக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கவுகாத்தி, அலிகார், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இதுதான் தமிழ்த்துறையின் நிலை.
இவையெல்லாம் தருண் விஜய்க்கு தெரியாத உண்மைகள் அல்ல. இந்து – இந்தி – இந்தியா என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய உணர்ச்சிதான் தமிழுக்கு எதிராக நிலவும் இந்த விசேட காழ்ப்புணர்வுக்கு காரணம். இந்த உணர்வு பொதுவாக பெரும்பாலான வட இந்தியக் கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது என்ற போதிலும், சமஸ்கிருத-இந்தி ஆதிக்க வெறி என்ற பார்ப்பன பாசிச அரசியல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கே உரியது.
ஆர்.எஸ்.எஸ்.-ன் பத்திரிகையான “பாஞ்சஜன்ய”வின் ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்தான் தருண் விஜய். இவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் சிந்தனைக் குழாமான சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின் இயக்குநர். தொகாடியாவின் வெறிப்பேச்சையே நாசூக்கான நாகரிகமான மொழியில் பேசத் தெரிந்த வித்தகர். இந்து தேசிய அரசியலைத் தீவிரமாகக் கொண்டு செல்லும் நோக்கத்துக்காகவே ஆர்.எஸ்.எஸ். தலைமையால் பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டிருப்பவர்.
இங்ஙனம் பார்ப்பனப் பாசிசக் கும்பலின் மூளையாக முன்நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு நபர் தமிழுக்கு ஆதரவாக வலிந்து பேசுவதற்கு காரணம் என்ன? தமிழின் தனித்துவத்தையும் தமிழகத்தின் வரலாற்றையும் பற்றி இதற்கு முன் எதுவுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்து கொண்டது போலவும் அவர் நடத்தும் இந்த நயவஞ்சக நாடகத்தை ஊடகங்களும் கடைவிரிக்கக் காரணம் என்ன? மோடி அரசின் சமஸ்கிருத / இந்தி திணிப்பு தோற்றுவிக்கும் எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்வதும், தமிழையும் தமிழ் மரபையும் பார்ப்பனியத்தின் நோக்கத்திற்கேற்ப திசைதிருப்பி நிறுவனமயமாக்கிக் கொள்வதும்தான் இதன் நோக்கம்.
சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட, சுயேச்சையான, தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற, மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கின்ற திராவிட மொழி என்ற பெருமையைப் பெற்றது தமிழ். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனக் கும்பலால் கிட்டத்தட்ட கொன்று புதைக்கப்பட்டிருந்த தமிழை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல். ஆரிய – சமஸ்கிருதச் சதியை அம்பலமாக்கியது மட்டுமின்றி, தமிழின் சுயேச்சையான திராவிட மரபை எடுத்துக் காட்டிய காரணத்தினாலேயே, கால்டுவெல்லைக் கயவன் என்று தூற்றுபவர்கள் இந்துத்துவவாதிகள்.
தருண் விஜய், சென்ற ஆண்டு மாநிலங்களவையில் தமிழ்த்துதி பாடிய அதே மாதத்தில், சமஸ்கிருதத்தை காங்கிரசு அரசு அழித்து வருவதாக குற்றம் சாட்டி பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரையில் காணப்படும் வரிகள் இவை.
“சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்து விடும்… பிறப்பு முதல் இறப்பு வரை, குழந்தைக்குப் பெயர் வைப்பது, திருமணம் ஆகியவற்றில் தொடங்கி, மரணத்துக்குப் பின் சோர்க்கத்திற்கு நுழைவுச்சீட்டு பெறுவது வரையிலான அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை. சமஸ்கிருதம்தான் இந்தியா. இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே, அதனை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும்.” (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)
தருண் விஜய் கூறுகின்ற அந்த நிலைமைதான் பார்ப்பனக் கொடுங்கோன்மை. அதனை எதிர்த்துப் போராடியதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி பெற முடிந்தது. தங்களுடைய பழைய பொற்காலத்தை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து கொள்வதுதான் இந்துத்துவ சக்திகளின் நோக்கம்.
“வேத-உபநிடதம் மட்டுமின்றி திருக்குறளும் படிக்க வேண்டும்” என்று தருண் விஜய் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார். பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரித்து விழுங்க முயன்றதைப் போலவே, வள்ளுவரையும் ஒரு ரிஷி ஆக்கி, திருக்குறளை தர்ம சாத்திரப் பட்டியலில் சேர்த்து நிறுவனமயப் படுத்துவதுதான் இதன் நோக்கம். தன்னை எதிர்த்து நின்ற பழங்குடிகளையும், மொழிகளையும், இனங்களையும் நசுக்கி அழித்தது மட்டுமல்ல, அரவணைத்தும் அழித்திருக்கிறது பார்ப்பனியம் என்பதே வரலாறு. அத்தகைய அரவணைப்புதான் தருண் விஜயின் தற்போதைய தமிழ்க் காதல்.
தமிழகத்தை மட்டுமல்ல, பாரதிய ஜனதாக் கட்சி கால்பதிக்க முடியாத வட கிழக்கிந்திய மாநிலங்களையும் வழிக்கு கொண்டுவரும் பொறுப்பு தருண் விஜய்க்கு தரப்பட்டிருக்கிறது என்பது அவரது வலைத்தளத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.
Read More...

மோடிக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?: டெல்லி இமாம் விளக்கம்!



டெல்லி ஜமா மசூதியின் துணை இமாம் பதவியேற்பு விழாவிற்கு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்காதது குறித்து இமாம் புகாரி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியிலுள்ள ஜமா மசூதியின் இமாமாக உள்ளவர் சையத் அகமது புகாரி. இவர் தனது 19 வயது மகனான ஷபானை துணை இமாமாக நியமித்துள்ளார். இதற்கான பதவியேற்பு விழா நவம்பர் 22ஆம் தேதி மசூதியில் நடைபெற உள்ளது. 


இதில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு புகாரி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை.

இதற்கு விளக்கம் அளித்து இமாம் புகாரி கூறுகையில், ''எனது மகன் துணை இமாமாக பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் இந்திய, வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். 


ஆனால், மோடிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஏனென்றால், குஜராத் கலவரம் தொடர்பாக மோடியை இஸ்லாமியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மோடிக்கு எங்களை பிடிக்காது. எங்களுக்கு அவரை பிடிக்காது. அவர் இஸ்லாமியர்களுடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்யவில்லை. இஸ்லாமியர்களை விட்டு விலகியே இருக்கிறார்'' என்றார்.
Read More...